Home Video “சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா? (முன்னோட்டம்)

“சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா? (முன்னோட்டம்)

1659
0
SHARE
Ad

சென்னை – தமிழில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அண்மையக் காலங்களில் விக்ரமின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விறுவிறுப்பான, பரபரப்பான படங்களைத் தரும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் இந்த மாதம் வெளியாகவிருக்கும் சாமி-2 திரைப்படம் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

வில்லனாக, பாபி சிம்ஹா விக்ரமுடன் மோதுவதால் படத்தில் கூடுதல் சுவாரசியம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

சாமி  படம், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹரியை முன்னணி இயக்குநராக உயர்த்தியதோடு, விக்ரமுக்கும் மிகப் பெரிய வசூல் நட்சத்திரம் என்ற அந்தஸ்தைக் கொடுத்தது. அந்தப் படத்தைப் போலவே சாமி-2 படமும் ஹரி-விக்ரம் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தருமா என்ற ஆர்வம் தமிழ்த் திரையுலகில் ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக விக்ரமுடன் இணைகிறார். ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிக்கிறார்.

சாமி-2 படத்தின் முதல் முன்னோட்டம் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு இரசிகர்களால் பரவலாக சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கப்பட்டது. தற்போது படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் சாமி-2 படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியிடப்பட்டு, இரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-