Home நாடு சுல்கிப்ளி பேச்சை இனியும் பொறுத்து கொள்ள முடியாது – மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கை

சுல்கிப்ளி பேச்சை இனியும் பொறுத்து கொள்ள முடியாது – மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கை

641
0
SHARE
Ad

1கோலாலம்பூர்,மார்ச் 30- இந்துகளைப் பற்றியும் இந்து கடவுள்களைப் பற்றியும் மிகவும் இழிவாக பேசி வரும் டத்தோ சுல்கிப்ளி நோர்டின் (செய்கைகளை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத்தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

“இம்முறை மட்டுமல்ல… பல முறை அவர் இந்துகளைப் பற்றி விமர்சனம் செய்து இருக்கிறார். அவரின் பேச்சு நாட்டின் நிலைத்தன்மையை சீர் குலைக்கும் என்பதோடு மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் டத்தோ மோகன்ஷான் கூறினார்.

“ஏற்கனவே, அவரின் விமர்சனம் குறித்து புகார் செய்திருந்தோம். ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் கவனத்திற்கு அவரின் விமர்சனம் குறித்து கொண்டு சென்றிருந்தோம். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த முறை அரசாங்கம் சுல்கிப்ளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மோகன் ஷான் கேட்டுக் கொண்டார்.