அவருக்குப் பின்னர் டான்ஸ்ரீ அப்துல் ரஹிம் தம்பி சிக் மலாக்கா முதலமைச்சராகப் பதவியேற்றார். சனிக்கிழமை இரவு (செப்டம்பர் 15) மலாக்கா சுங்கை ரம்பையில் நடைபெற்ற பெர்சாத்து கட்சி நிகழ்ச்சியில் அடிப் அடாம் அந்தக் கட்சியில் இணைந்தார்.
தனது உறுப்பினர் பாரத்தை அவர் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், பிரதமரின் அரசியல் செயலாளருமான அபு பாக்கார் யாஹ்யாவிடம் சமர்ப்பித்தார். மலாக்கா பெர்சாத்து மகளிர் தலைவி அசாலினா அப்துல் ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
77 வயதான அடிப் அடாம் துன் மகாதீர் நான்காவது பிரதமராகப் பதவி வகித்த போது அவரது அமைச்சரவையிலும் அமைச்சராக இடம் பெற்றிருந்தார்.