Home நாடு லீ சோங் வெய் – மூக்கு புற்றுநோயால் அவதிப்படுகிறார்

லீ சோங் வெய் – மூக்கு புற்றுநோயால் அவதிப்படுகிறார்

1257
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய் மூக்கில் பீடித்துள்ள புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்ற தகவலை தேசிய பூப்பந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அவர் ஏதோ ஒரு வகை நோயால் அவதிப்படுகிறார் என்ற செய்திகள் ஊடகங்களில் உலவி வந்தன. அதற்காக அவர் தைவானில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது மூக்கு புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வெளியிட்ட தேசிய பூப்பந்து சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ நோர்சா சக்காரியா சமூக ஊடங்களில் பரவி வரும் சில தவறான தகவல்களை சரி செய்வதற்காக விளக்கம் தரப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“லீ சோங் வெய் இந்த நோயிலிருந்து மீண்டு வர அவருக்கு போதுமான மன அமைதியை நாம் வழங்க வேண்டும். தேவையற்ற விமர்சனங்களை வெளியிட்டு அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது. சோய் வெய் தற்போது தைவானில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிகிச்சைகளின் மூலம் அவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி வருகிறார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து அவரைக் கவனித்துக் கொள்கிறார்கள்” என்றும் நோர்சா மேலும் தெரிவித்திருக்கிறார்.