கோலாலம்பூர் – நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாட்டினர் இந்த சம்பவங்களால் பாதிப்படைந்திருக்கின்றனர்.
மரணமடைந்தவர்களில் 3 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நச்சு கலந்த மதுபானத்தால் மரணமடைந்தவர்களின் தகவல்களை மேலே காணும் வரைபடம் விளக்கிக் காட்டுகிறது.
இதுகுறித்து அண்மையில் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இதுவரையில் 262 மதுபான விற்பனைக் கடைகளில் 780 ரக மதுபானப் புட்டிகள் சோதனையிடப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்திருக்கிறார்.
இதன் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.