Home கலை உலகம் ரஜினியின் ‘பேட்ட’ பொங்கலுக்கு வெளியீடு

ரஜினியின் ‘பேட்ட’ பொங்கலுக்கு வெளியீடு

1070
0
SHARE
Ad

சென்னை – ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான “பேட்ட” பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணையும் பாபி சிம்ஹாவும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை வெளியான சாமி -2 திரைப்படத்தை நேரில் திரையரங்கில் காண வருகை தந்த பாபி சிம்ஹாவைச் சந்தித்த இரசிகர்கள் ‘பேட்ட’ படத்தின் நிலவரம் குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சாமி-2 படத்தில் பாபி சிம்ஹா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவுடன் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். திரிஷா, சிம்ரன் ஆகியோரும் இணைகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவின் லக்னோவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

எனினும், அஜித் நடித்து வரும் விசுவாசம் படமும் 2019 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், இரண்டு படங்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஏதாவது ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.