Home கலை உலகம் பிக்பாஸ் 2 : யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

பிக்பாஸ் 2 : யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

1298
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் இறுதி பங்கேற்பாளராக யாஷிகா ஆனந்த் (படம்) திகழ்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (23 செப்டம்பர்) தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 2 அங்கத்தில்  யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட இந்த வாரம் ஜனனியைத் தவிர 5 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

வெளியேற்றப்பட எஞ்சியுள்ள 5 பேரும் பரிந்துரைக்கப் பட்டிருந்த நிலையில் இந்த வாரம் மட்டும் இருவர் வெளியேற்றப்படுவர் என்றும் அதைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் அனைவரும் இறுதிச் சுற்று வரை நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை (செப்டம்பர் 22) நிகழ்ச்சியில் நடிகர் பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரத்துக்குப் பின்னர் பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்படுவது இனியும் நீடிக்காது.

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் முதல் ஆளாக பாலாஜி வெளியேற்றப்பட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரண்டாவதாக யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இனி பிக்பாஸ் வீட்டில் எஞ்சியிருப்போர் – இறுதிச் சுற்றுவரை தாக்குப் பிடித்திருப்போர் – கீழ்க்காணும் நால்வர் மட்டுமே :-

  1. விஜயலட்சுமி
  2. ஐஸ்வர்யா
  3. ஜனனி
  4. ரித்விகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இறுதிவரைத் தாக்குப் பிடித்திருக்கும் நால்வரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.