
புத்ரா ஜெயா- தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் அம்னோவைச் சேர்ந்த பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரகிமும் அவரது சகோதரர்களில் ஒருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் கைதுக்கான காரணம் இதுவரையில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த மே 23-ஆம் தேதி அசிசின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஊழல் தடுப்பு ஆணையம் 5 இலட்சம் ரிங்கிட் ரொக்கத்தையும், மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பலநாட்டு அந்நிய நாணயங்களையும் கைப்பற்றியது.
இலஞ்சம் பெற்றதன் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசிஸ் விசாரிக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.