Home இந்தியா உயரமான மலைப் பகுதியில் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்

உயரமான மலைப் பகுதியில் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்

859
0
SHARE
Ad

பாக்யோங் – இந்தியாவின் வடமேற்கில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பாக்யோங் என்ற இடத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (செப்டம்பர் 24) திறந்து வைத்தார்.

உயரமான மலைப் பகுதியில் அழகான இமயமலைச் சாரலில் அமைந்திருக்கும் பாக்யோங் விமான நிலையம் விரைவில் அதிகமான சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் விமான நிலையமாகவும், சிக்கிம் மாநிலத்திற்கு உலகெங்கிலும் இருந்து அதிகமான வெளிநாட்டுப் பயணிகளைக் கொண்டு வந்து சேர்க்கும் நுழைவாயிலாகவும் இந்த விமான நிலையம் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.