Home கலை உலகம் சிக்கலின்றி வெளியாகிறது “செக்கச் சிவந்த வானம்”

சிக்கலின்றி வெளியாகிறது “செக்கச் சிவந்த வானம்”

865
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் வெளியாவதில் இறுதிநேரச் சிக்கல்கள் நேரலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டிருந்தன.

எனினும், எந்தவிதச் சிக்கல்களும் இன்றி இந்தத் திரைப்படம் நாளை வியாழக்கிழமை மலேசியா உள்ளிட்டு அனைத்துலக அளவில் வெளியாகிறது.

மலேசியாவின் பல திரையரங்குகளில் நாளை முதல் செக்கச் சிவந்த வானம் திரையீடு காணும்.

#TamilSchoolmychoice

சென்னையிலும் பல திரையரங்குகளில் நுழைவுச் சீட்டுக்களுக்கான முன்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு வந்த தகவல்களின்படி சிம்பு நடித்த முந்தைய படங்களின் மூலம் ஏற்பட்ட பணப் பிரச்சனைகளினால் செக்கச் சிவந்த வானம் வெளியாவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கிறது செக்கச் சிவந்த வானம்.