போர்ட்டிக்சன் – சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பெல்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசா சமாட் முன்பு தெலுக் கெமாங் என அழைக்கப்பட்ட போர்ட்டிக்சன் தொகுதியின் அம்னோ தலைவருமாவார்.