Home உலகம் மகாதீர் இலங்கை அதிபரைச் சந்தித்தார்

மகாதீர் இலங்கை அதிபரைச் சந்தித்தார்

1062
0
SHARE
Ad

நியூயார்க் – ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக இலண்டனில் இருந்து நியூயார்க் வந்தடைந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருவதோடு, பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார்.

அந்த வரிசையில் அவர் இலங்கைப் பிரதமர் மைத்திரிபாலா சிறிசேனாவையும் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 26) சந்தித்து அளவளாவினார். மகாதீருடனான தனது சந்திப்பு குறித்து புகைப்படத்துடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் மைத்திரிபாலா சிறிசேனா “துன் மகாதீர் ஒரு வாழும் சாதனையாளர் ஆவார். அவரை மீண்டும் நியூயார்க்கில் சந்தித்தது குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு முன் மகாதீரை 2016-இல் கோலாலம்பூரில் சந்தித்தேன். அவரை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

“துன் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவுகள் புதிய உச்சத்தை அடையும் என நம்புகிறேன்” என்றும் மைத்திரிபாலா சிறிசேனா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.