Home உலகம் சுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது

சுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது

1244
0
SHARE
Ad

பாலு (சுலாவாசி) – இந்தோனிசியாவின் சுலாவாசி தீவுப் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிய 7.7 ரிக்டர் புள்ளி அளவிலான நிலநடுக்கத்தையும் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியையும் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1400-ஐ எட்டியுள்ளது. மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பல உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் இந்தோனிசியாவுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளன.

இந்நிலையில் சுலாவாசியில் உள்ள எரிமலை ஒன்று கடந்த சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்தது. இன்று புதன்கிழமை அந்த எரிமலை வெடித்து எரிகுழம்பை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும் சுனாமிக்கும் இந்த எரிமலை வெடிப்புக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.