நியூயார்க் – உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் தென் வாஷிங்டனில் உள்ள 14,500 ஏக்கர் விவசாய நிலத்தை 171 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையில் வாங்கப்பட்ட விவசாய நிலங்களிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நிலம் இதுதான் என அமெரிக்காவின் நிலங்களுக்கான பதிவகம் தெரிவித்துள்ளது.
2010-இல் 75 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட இந்த நிலம் 2018-ஆம் ஆண்டில் பில் கேட்சுக்கு 171 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்கள் மிக விஸ்தாரமான விவசாய நிலைங்களை சேமிப்பாக வாங்கிக் குவிக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
98.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளைக் கொண்ட பில் கேட்ஸ் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படுகிறார்.