Home Photo News மகாத்மா காந்தி நினைவு தபால் தலை – அன்வார் வெளியிட்டார்

மகாத்மா காந்தி நினைவு தபால் தலை – அன்வார் வெளியிட்டார்

1378
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவுத் தபால் தலையை, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.குலசேகரன், சேவியர் ஜெயகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதே நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிருதுள் குமார் உரையாற்றினார்.தனது தந்தை துன் வீ.தி.சம்பந்தன் பின்பற்றிய காந்திய தத்துவங்கள் குறித்தும் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை என்ற தமிழ்ப் பள்ளியை நிறுவுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்தும் அவரது புதல்வி தேவகுஞ்சரி சம்பந்தன் விளக்கினார்.

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

தேவகுஞ்சரி வீ.தி.சம்பந்தன்