Home நாடு நஜிப்பிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை

நஜிப்பிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை

924
0
SHARE
Ad
நஜிப் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை வணிகக் குற்றப் பிரிவுத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் அங்கு சுமார் 3 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட பணத்தில் 43.3 மில்லியன் ரிங்கிட் காணாமல் போனதாக எழுந்த விவகாரம் குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நஜிப் தொடர்புடைய இல்லங்களில் இருந்து 116.7 மில்லியன் மதிப்புடைய ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை அறிவித்தது. ஆனால், அம்னோ நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட பணம் 160 மில்லியன் என்றும் அந்தப் பணத்தை அம்னோவுக்குத் திரும்பத் தர வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

எனவே, “காணாமல் போனதாக” கூறப்படும் 43.3 மில்லியன் ரிங்கிட் எங்கே என இணைய ஊடகங்களில் சில கேள்வி எழுப்பி வருகின்றன.

இதற்கிடையில் நஜிப் மீதான இன்றைய விசாரணையும் 1எம்டிபி விவகாரம் தொடர்புடையவை என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன. வணிகக் குற்றப் பிரிவின் தலைமையகத்திற்கு காலை 9.50 மணியளவில் வந்த நஜிப் கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள கீழ்த்தள கார் நிறுத்துமிடத்திலிருந்து நேரடியாக விசாரணை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அதே வழியாக பிற்பகல் ஒரு மணியளவில் வெளியேறினார்.

இதன் காரணமாக, கட்டடத்தின் முதன்மை வாயிலில் நஜிப்புக்காக காத்திருந்த பத்திரிக்கையாளர்களை நஜிப் தவிர்த்தார்.

அவர் காவல் துறைக்கு வாக்குமூலம் வழங்க வருவது இது 4-வது தடவையாகும்.