Home கலை உலகம் ரிஷி கபூருக்கு புற்று நோயா?

ரிஷி கபூருக்கு புற்று நோயா?

1129
0
SHARE
Ad

மும்பை – 1970-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ‘போபி’ திரைப்படத்தையும் அதன் இமாலய வெற்றியையும் இந்தியத் திரையுலகம் அவ்வளவு எளிதில் மறந்து விடாது.

அந்த ‘போபி’ படத்தின் மூலம் டிம்பிள் கபாடியாவுடன் அறிமுகமாகி, உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களை குறிப்பாக இரசிகைகளைக் கவர்ந்த ரிஷி கபூர் தற்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்ற தகவல்கள் பரவத் தொடங்கியிருக்கின்றன. அவரைப் பீடித்துள்ள  புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கிறது என ஊடகங்கள் ஆரூடங்கள் கூறிவரும் நிலையில், ரிஷி கபூர் தற்போது பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இதற்கிடையில் இதுகுறித்த கருத்துரைத்த அவரது மூத்த சகோதரர் ரந்தீர் கபூர், ரிஷி கபூர் தற்போது பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்றும் அந்தப் பரிசோதனைகள் இன்னும் முழுமையடையாத நிலையில் அவருக்கு என்ன நோய் என்பது குறித்து கருத்துரைப்பது முறையல்ல என்றும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ரிஷி கபூர், ரந்தீர் கபூர் இருவரும் மறைந்த பிரபல நடிகர் ராஜ்கபூரின் மகன்களாவர்.

இன்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக உலா வந்து கொண்டிருக்கும் ரன்பீர் கபூரின் தந்தைதான் ரிஷி கபூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.