Home நாடு பூச்சோங் ஈயக்குட்டையில் விழுந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங் ஈயக்குட்டையில் விழுந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது

1048
0
SHARE
Ad
நேற்றைய சம்பவத்தில் ஈயக்குட்டையில் மூழ்கி இறந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள்

பூச்சோங் – இங்கு தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள பயன்படுத்தப்படாத ஈயக் குட்டை ஒன்றில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் முகமட் இல்ஹாம் பாஹ்மி முகமட் அசாமின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

இன்று மாலை 5.45 மணியளவில், அந்த சிறுவன் தவறி விழுந்த இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் அவனது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இலாகா அறிவித்தது.

அந்த சடலம் செர்டாங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஈயக்குட்டையில் தவறி விழுந்த அந்த சிறுவனைத் தேடும் பணியில் நேற்று ஈடுபட்ட மீட்புப் படையின் ஆறு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் உயிரிழப்புக்குப் பின்னர் அந்த சிறுவனின் சடலம் கிடைத்திருக்கும் சோகம் நேர்ந்திருக்கிறது.