Home நாடு போர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்

போர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்

1034
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – நடைபெற்று வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் உச்சகட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 8-ஆம் தேதியாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

காரணம், அன்றுதான் பிரதமர் துன் மகாதீர் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் போர்ட்டிக்சனில் மேடையேறி அன்வாருக்காகப் பிரச்சாரம் செய்யப் போகிறார்.

அன்வாருக்கு எதிராக சதி செய்கிறார் என்றும், அன்வாரைப் பிரதமராக வரவிடமாட்டார் என்றும் சில தரப்புகள் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருவதால் அவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நேரடியாக போர்ட்டிக்சனில் அன்வாருக்காகப் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன் என மகாதீர் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மகாதீரை மனமுவந்து வரவேற்பதாக அன்வாரும் அறிவித்திருக்கிறார்.

மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மகாதீர்-அன்வார் இருவரும் இணைந்து சில நிகழ்ச்சிகளில், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தாலும், பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் எதிலும் இருவரும் இணைந்து கலந்து கொண்டதில்லை.

எனவே, இருவரையும் உற்சாகத்துடன் ஒரே மேடையில் வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது போர்ட்டிக்சன். வரலாறு காணாத மக்கள் கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு திரளும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் அன்வார் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் மகாதீரின் பிரச்சாரம் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும் மகாதீரோடு இந்தப் பிரச்சாரத்தில் இணைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.