Home நாடு பேராக் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி தங்க விருது பெற்றனர்

பேராக் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி தங்க விருது பெற்றனர்

3218
0
SHARE
Ad
குமரன் – மேகவர்ணன் – தமிழ் மணி

கோலாலம்பூர் – உருமாற்றுப் பள்ளி 2025 இரண்டாவது தேசிய நிலை மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படைத்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி ஆகிய இருவரும் தங்க விருது பெற்றனர்.

இந்த மாநாடு கடந்த அக்டோபர் 1 முதல் 3ஆம் திகதி வரையில் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் உருமாற்றுப் பள்ளித் திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் தங்களின் ஆய்வுகளையும் படைப்புகளையும் புத்தாக்கங்களையும் வெளிப்படுத்துவதற்காக இம்மாநாடு நடத்தப்பட்டது. அதில் இரண்டே தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே கலந்துகொண்டன.

அந்த வகையில், தாப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குமரன் மற்றும் உலு பெர்னாம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தமிழ்மணி ஆகிய இருவரும் தங்கள் பணித்தாளை சுவரொட்டி வடிவத்தில் சிறப்பாக உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இவர்களோடு சேர்ந்து தாப்பா ரோடு ஆசிரியர் செயற்பாட்டு நடுவத்தின் அதிகாரி மேகவர்ணனும் தம்முடைய ஆய்வுக் கட்டுரையைப் படைத்தார்.

கட்டுரை படைத்த ஆசிரியர் மேகவர்ணன்
#TamilSchoolmychoice

இவர்களின் இந்த வெற்றியானது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் தேசிய நிலையிலும் அனைத்துலக நிலையிலும் போட்டி வழங்கும் அளவுக்குத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் ஆய்வுகளும் படைப்புகளும் அமைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.