Home இந்தியா சென்னையில் நக்கீரன் கோபால் கைது

சென்னையில் நக்கீரன் கோபால் கைது

1027
0
SHARE
Ad

சென்னை- தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், தமிழக ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று கண்டார்.

அவரைப் பார்க்கச் சென்ற வைகோவுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஆளுநரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தார் என்ற புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.