Home இந்தியா கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை

1618
0
SHARE
Ad

சென்னை- இன்று கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போடப்பட்ட 124-வது பிரிவையும் நீதிபதி இரத்து செய்திருக்கிறார்.

ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் இன்று புனே செல்வதற்காக சென்னை விமான நிலயத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது தேசத் துரோக வழக்கையும் காவல்  துறையினர் பதிவு செய்தனர்.

ஆளுநர் மாளிகை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிந்தாதிரிபேட்டை துணை ஆணையர் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கோபால் மீது சட்டப்பிரிவு 124 – சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும் நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் நீதிபதி ரத்து செய்தார். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.