Home கலை உலகம் அருண் விஜய் தொடக்கி வைத்த அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா

அருண் விஜய் தொடக்கி வைத்த அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா

1107
0
SHARE
Ad

கிள்ளான் – ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டுக் கோலாகலமாகப் படைக்கப்பட்டு வரும் இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி இந்த ஆண்டும் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் திரண்டு வரும் மக்கள் கூட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

பிரபல நடிகர் அருண் விஜய் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அண்மையில் இயக்குநர் மணிரத்னத்தின் படைப்பாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அருண் விஜய் சிறப்பாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாக குழுமத்தின் உயர்நிலைத் துணைத்தலைவர் டாக்டர் இராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, நெஸ்ட்லே பிரதிநிதி யோகேஸ்வரன், ஜிஎம் கிள்ளான் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்து  கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேடையிலேயே  அருண் விஜயின் சிறப்பு நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றது. இதனை ராகாவின் அறிவிப்பாளர் கீதா மற்றும் பாடகரும் நடிகருமான முகேன் ராவ் தொகுத்து வழங்கினார்கள்.

நேர்காணல் இறுதியில் அருண் விஜய் “என்னை அறிந்தால்” திரைப்படத்திலிருந்து ‘அதாரு அதாரு’ பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடி ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றார். அதுமட்டுமின்றி, தன்னுடைய ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் நம்முடைய உள்ளூர் கலைஞர்களான பாலன் கேஸ்மிர், புனிதா ராஜா, ஷஸ்தான் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றது.