Home நாடு “அனைத்து இனங்களின் ஆதரவால் வென்றேன்” அன்வார் பெருமிதம்

“அனைத்து இனங்களின் ஆதரவால் வென்றேன்” அன்வார் பெருமிதம்

1345
0
SHARE
Ad
20 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்வார்-மகாதீரை ஒரே மேடையில் இணைத்தது போர்ட்டிக்சன் இடைத் தேர்தல்…

போர்ட்டிக்சன் – அனைத்துத் தரப்பு மலேசியர்களும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் தனது வெற்றிக்காகத் தந்திருக்கும் ஆதரவு குறித்து தான் பெருமிதமும் பணிவும் அடைவதாக அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

இந்த வெற்றி ஒரு முக்கிய அரசியல் திருப்பம் என்றும் இந்த மாபெரும் வெற்றி நம்பிக்கைக் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கைக்கான அடையாளம் என்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான அங்கீகாரம் என்றும் அன்வார் தனது வெற்றி குறித்து மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 15-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்போது முதல் நாளே அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.