Home இந்தியா தமிழக அமைச்சர் ஜெயகுமார் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்

தமிழக அமைச்சர் ஜெயகுமார் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்

1019
0
SHARE
Ad

சென்னை – தமிழக அமைச்சர் ஜெயகுமார் மீது டிடிவி தினகரன் சார்பு சட்டமன்ற உறுப்பினரான  வெற்றிவேல் அடுக்கடுக்காக பாலியல் புகார்களைச் சுமத்தியுள்ளார்.

ஜெயகுமாருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண்மணி அவர் மூலமாக குழந்தையைப் பெற்றுள்ள விவகாரம் ஓர் ஒலி நாடா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தப் பெண்மணியின் தாயார் ஜெயகுமாருடன் பேசுவது போன்ற அந்த ஒலி நாடா வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

“ஜெயகுமார் பதவியிலிருந்து விலகிவிடுவது நல்லது. இல்லாவிட்டால், மேலும் அசிங்கமாகிவிடும்”எனவும் வெற்றிவேல் எச்சரித்தார். அந்த ஒலி நாடாவில் அமைச்சர் ஜெயகுமார் பேசுவது போல் இருக்கும் நிலையில், அந்தக் குரல் என்னுடையதல்ல என ஜெயகுமார் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆனால், அந்தக் குரல் என்னுடையதல்ல என ஜெயகுமார் கூறியுள்ளாரே தவிர அந்தக் குழந்தை என்னுடையதல்ல என ஜெயகுமார் கூறவில்லையே” எனவும் வெற்றிவேல் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தி வருவதாகவும், ஜெயகுமார் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்படலாம் என்றும் ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன.