Home 13வது பொதுத் தேர்தல் குளுவாங்கில் களமிறங்கும் ஜசெகவின் லியு சின் தோங்

குளுவாங்கில் களமிறங்கும் ஜசெகவின் லியு சின் தோங்

665
0
SHARE
Ad

Liew-Chin-Tong-Bk-Bendera-MP-Featureஏப்ரல் 1 – வடக்கில் பிரபலமான ஜசெக தலைவர்களை தென் மாநிலமான ஜோகூரில் களமிறக்கும் ஜசெக தலைமைத்துவத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக மற்றொரு பினாங்கு ஜசெக தலைவர் ஜோகூர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவிருக்கின்றார்.

எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் புக்கிட் பெண்டேரா நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான லியு சின் தோங் (படம்), ஜோகூர் மாநிலம் குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஜ.செ.க கட்சியின் பொதுச் செயலாளரும், தற்போதைய பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜோகூர் கேலாங் பாத்தா  தொகுதியில் போட்டியிடப் போவதாக ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ள நிலையில், தேசிய முன்னணியின் கோட்டையை தகர்க்கப் புறப்படும் இரண்டாவது பெரிய அஸ்திரமாக லியு சின் தோங் இருப்பார் என்று மக்கள் கூட்டணி பெரிதும் நம்புகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், லியு சின் தோங் பினாங்கு மாநிலத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெராக்கான் தலைவர்களுள் ஒருவரான சியா குவான் சையை 16,112 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லியு குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதால் அவரது நடப்பு நாடாளுமன்ற தொகுதியான புக்கிட் பெண்டேராவில் அவருக்கு பதிலாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் செயலாளரான ஸைரில் கீர் ஜோகாரி நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியுவுடன் மோதப்போகும் ஹௌ காக் சொங்

குளுவாங் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்  ம.சீ.ச கட்சியைச் சேர்ந்த ஹௌ காக் சொங், லியு சின் தோங்கிற்கு எதிராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஹௌ காக் சொங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜ.செ கவைச் சேர்ந்த லாம் ஹுவாவை  3,781 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.