Home கலை உலகம் 555 படத்திற்காக பட்டினி கிடந்தேன்- பரத்

555 படத்திற்காக பட்டினி கிடந்தேன்- பரத்

695
0
SHARE
Ad

bharathசென்னை, ஏப்ரல் 1- தமிழ் சினிமா கதாநாயகர்கள் தற்போது எந்தவொரு காட்சியும் நிஜமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக சவாலாக எடுத்து நடிக்க தயாராகிவிட்டனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித், விஷ்ணுவர்தன் படத்தில் நடித்த போது விபத்தில் சிக்கி சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மற்றொரு நடிகர் ஷாம் 6 படத்திற்காக இரவு பகல் தூங்காமல் கண்கள் எல்லாம் வீங்கியபடி இயற்கையாக கொண்டு வந்து நடித்தார். இப்போது அந்தவரிசையில் நடிகர் பரத்தும் சேர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ போன்ற படங்களை இயக்கிய சசி தற்போது இயக்கிவரும் 555 என்ற படத்திற்கு பரத் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.

இப்படத்தில் பரத்திற்கு மூன்று கதாபாத்திரமாம். இந்த மூன்று தோற்றத்திற்காக பரத் த‌ன்னை தயார்படுத்தி நடித்துள்ளார்.

அதாவது சாக்லேட் பாய் போன்று ஒரு கதாபாத்திரமும், தாடி, மீசையுடன் ஒரு கதாபாத்திரமும், மொட்டை தலையுடன் மற்றுமொரு கதாபாத்திரமும் வருகிறது. இதுகுறித்து பரத் கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடமாக தாடி, மீசை மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தேன்.

வாழ்க்கையை பறிகொடுத்த தோற்றம் வரவேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன். கடந்த ஒரு வருடமாக சரியான சாப்பாடு கிடையாது. மொட்டையுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக தாடி, மீசையை எடுத்து, தலைமுடியை மொட்டை போட்டுக்கொண்டேன்.

ஒரு நோயாளி போன்ற தோற்றம் வேண்டும் என்பதற்காக, மொட்டை போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தண்ணீர் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன். இதனால் 75 கிலோவாக இருந்த எனது எடை 64 கிலோவாக குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.