சென்னை, ஏப்ரல் 1- சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டு வெளியேற்றப்பட்டனர்.
அவையில் தொடர்ந்து முழக்க மிட்டதால் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பேருந்து மின்னணு சீட்டு கருவி வாங்கியது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
கருவிகள் வாங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பத்திரிகையில் வந்த செய்தி ஆதாரமற்ற செய்தி என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மேலும், புகார் கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என கூறினார். இதனால் திமுகவினர் முழக்கமிட்டுக் கொண்டே சபநாயகரை நோக்கி முன்னேறி வந்தனர். அமைதி காக்கும்படி சபாநாயகர் கூறியும் கேட்காததால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.