Home வணிகம்/தொழில் நுட்பம் ஒரே நாளில் 129 பில்லியன் ரிங்கிட் பொருட்களை விற்பனை செய்த அலிபாபா!

ஒரே நாளில் 129 பில்லியன் ரிங்கிட் பொருட்களை விற்பனை செய்த அலிபாபா!

1197
0
SHARE
Ad

பெய்ஜிங் – சீனாவின் மிகப் பெரிய நிறுவனமான அலிபாபா ஆண்டுதோறும் நடத்தும் ‘சிங்கள்ஸ் டே’ இணையம் வழி விற்பனை உலகப் பிரசித்தி பெற்றதாகும். நவம்பர் 11-ஆம் தேதி சிங்கள்ஸ் டே என – அதாவது, தனித்திருப்பவர்களின் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் மிக அதிக அளவிலான கழிவுகளை வழங்கி இணையம் வழி பொருட்களை விற்கும் அலிபாபா, இத்தகைய விற்பனையில் ஆண்டுதோறும் சாதனைகளைப் புரிந்து வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஒரே நாளில் – 24 மணி நேரத்தில் – 213.5 பில்லியன் யுவான் மதிப்புள்ள (129 பில்லியன் ரிங்கிட்) பொருட்களை விற்பனை செய்துள்ளது அலிபாபா.

கடந்த ஆண்டு, 25 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களை இதே போன்று ஒரே நாளில் விற்பனை செய்த அலிபாபா அதைவிடக் கூடுதலான விற்பனையை இந்த முறை பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

விற்பனையான பொருட்களில் சியாவுமி என்ற சீன கைத்தொலைபேசி நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை முதலிடம் வகிக்கின்றன.