Home உலகம் மலேசியாவும், சிங்கப்பூரும் இரட்டைப் பிள்ளைகள் – மகாதீர் வர்ணனை

மலேசியாவும், சிங்கப்பூரும் இரட்டைப் பிள்ளைகள் – மகாதீர் வர்ணனை

1005
0
SHARE
Ad

சிங்கப்பூர் – மலேசியா சிங்கப்பூருடனான நல்லுறவுகளைத் தொடர்ந்து பேணி வரும் என்றும் இரு நாடுகளும் இரட்டைப் பிள்ளைகள் போன்றவர்கள் – பொருளாதார ரீதியாக ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு முன்னேறி வருவர் என்றும் சிங்கைக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டிருக்கும் துன் மகாதீர் கூறினார்.

இன்று மகாதீருக்கு சிங்கை பிரதமர் லீ சியன் லூங் வழங்கிய அதிகாரபூர்வ மதிய விருந்துபசரிப்பின் போது உரையாற்றியபோதே மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஆனால் அந்த இரட்டையரில் மூத்தவர் கொஞ்சம் பெரிய நிலப்பரப்பைக் கொண்டவர் என்பதோடு, வயதிலும் மூத்தவர்” எனவும் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரிந்திருந்த இரண்டு நாடுகள் ஒன்று சேர்ந்து பிறகு மீண்டும் பிரிந்த பின்னரும் தொடர்ந்து இணைந்து நல்லுறவோடு செயலாற்றுவது என்பது மிக அபூர்வமான ஒன்று என்றும் மகாதீர் வர்ணித்தார்.