Home கலை உலகம் 8 நாட்களில் 200 கோடியைத் தாண்டிய ‘சர்கார்’

8 நாட்களில் 200 கோடியைத் தாண்டிய ‘சர்கார்’

1553
0
SHARE
Ad

சென்னை – பஞ்சமில்லாமல் சர்ச்சைகளைச் சந்தித்தாலும், சில காட்சிகள் மறு தணிக்கை செய்யப்பட்டாலும், கோமளவல்லி என்ற பெயர் ஒலி இழப்பு செய்யப்பட்டாலும், வசூலில் கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் வாரிக் குவித்து வருகிறது சர்கார் திரைப்படம்.

எப்படி “மெர்சல்” திரைப்படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூல் சாதனை புரிந்ததோ அதே போன்று சர்கார் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்து வருகின்றது.

தீபாவளியன்று உலகம் எங்கும் திரைக்கு வந்த சர்கார், தமிழ் ராக்கர்ஸ் என்ற கள்ளத்தனமாக இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யும் தளத்தின் சவாலையும் சந்திக்க வேண்டியதிருந்தது. படம் திரையிடப்பட்ட அன்றே, சவால் விட்டமாதிரி இணையத்திலும் சர்கார் படத்தை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

#TamilSchoolmychoice

இதையும் தாண்டி, படம் திரையிடப்பட்ட 8 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கின்றது சர்கார். இதன் காரணமாக, உச்ச நட்சத்திர நடிகர்களில் தவிர்க்க முடியாத ஈர்ப்பு சக்தியாக விஜய் மாறியிருக்கிறார்.

அவரது அடுத்த படத்தை மீண்டும் அட்லீ இயக்குகிறார். மெர்சல் படத்தில் இடம் பெற்று ஒரு கலக்கு கலக்கிய ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடலின் தலைப்பே படத்தின் தலைப்பாகவும் இருக்கும் என முதல்கட்ட அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

சிபிஐ அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என்றும், புலனாய்வு பாணியில் அமைந்த ‘திரில்லர்’ படமாக இது அமையும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.