Home கலை உலகம் சவால் விட்டு ‘சர்கார்’ படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்

சவால் விட்டு ‘சர்கார்’ படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்

1458
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரைப்படங்களை சட்டவிரோதமாக, காப்புரிமை இன்றி இணையத் தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் வலைத்தளம் தமிழ் ராக்கர்ஸ். ஒரு படம் வெளியானதும், திரையரங்குக்குச் செல்லாமல் முன்கூட்டியே இணையத் தளத்தில் பார்க்கத் துடிக்கும் இரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணம் இணையத் தளத்தில் தமிழ்ப் படங்களை கள்ளப் பதிப்பாக வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தும் வலைத் தளம்தான் தமிழ் ராக்கர்ஸ்.

நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 5) சமூக ஊடகங்களின் வழி தமிழ் ராக்கர்ஸ் சவால் ஒன்றை விடுத்திருந்தது. இன்று தீபாவளிக்கு உலகம் எங்கும் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘சர்கார்’ படத்தை இணையத் தளத்தில் வெளியிடுவோம் என சர்கார் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சவால் விட்டிருந்தது தமிழ் ராக்கர்ஸ்.

இதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கமும் அறிவித்தது.

#TamilSchoolmychoice

நேற்று முதல் தமிழகத் தொலைக் காட்சி ஊடகங்களில் இதுவே முதன்மைச் செய்தியாக வலம் வரத் தொடங்கியது.

இந்நிலையில் சவால் விட்டபடி சர்கார் வெளியான முதல் நாளே அந்தப் படத்தை இணையத் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.