Home நாடு 48 தமிழர்கள் கொத்தடிமைகளாகப் பரிதவிப்பா?

48 தமிழர்கள் கொத்தடிமைகளாகப் பரிதவிப்பா?

1337
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாக இந்தக் காணொளியில் ஒருவர் விவரிக்கிறார்.

ஒரு குழு தங்களின் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு முறையான உணவு, தண்ணீர் வழங்காமல் கொடுமைப் படுத்தி வருவதாக ஒருவர் செல்பேசி மூலமான காணொளி மூலம் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் காணொளி பகிரப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத் தொலைக் காட்சி அலைவரிசைகளும் இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.