Home இந்தியா கஜா புயலின் கோரத் தாண்டவம் – இறுதி நிலவரம்!

கஜா புயலின் கோரத் தாண்டவம் – இறுதி நிலவரம்!

1251
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் காலை 8.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்:-)

  • கஜா புயலின் காரணமாக 6 மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதோடு, வலுவான புயல் காற்றும் வீசிவருகிறது. கடலூர், இராமநாதபுரம், இராமேஸ்வரம், வேதாரண்யம், தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.
  • தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 80 ஆயிரம் பேர் தற்போது 461 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • 405 அவசர சிகிச்சை ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • இன்னும் 2 மணி நேரத்தில் கஜா புயல் முழுமையாக தமிழகக் கரையோரப் பகுதிகளைக் கடக்கும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது.
  • தமிழக அமைச்சர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் சென்று கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை வழங்கி வருகின்றனர்.
  • சில பல்கலைக் கழகங்களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு வேறொரு நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • கஜா புயலின் வேகம் நாகையில் மணிக்கு 117 கிலோ மீட்டர் என்ற வேகத்திலும் மற்ற இடங்களில் மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற அளவிலும் இருந்ததாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  • பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்களை கனரக இயந்திரங்களைக் கொண்டு அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
  • எனினும் கஜா புயல் முழுமையாகக் கரையைக் கடந்த பின்னரே நிவாரணப் பணிகளும், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • வேதாரண்யம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பினால் பல வீடுகளில் கடல் நீர் வீடுகளின் உள்ளே புகுந்ததாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

-செல்லியல் தொகுப்பு