Home நாடு ரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன?

ரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன?

1085
0
SHARE
Ad

சிரம்பான் – இன்று சிரம்பான் தேர்தல் நீதிமன்றம், ரந்தாவ் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இரத்து செய்து தீர்ப்பளித்திருக்கும் வேளையில், அந்தத் தொகுதியில் நடைபெறும் மறு தேர்தலில் மீண்டும் முகமட் ஹசான் அம்னோ – தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுவார் என அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி அறிவித்திருக்கிறார்.

பிகேஆர் கட்சி சார்பில் ரந்தாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தான் தயார் என்றும் இன்றைய வழக்கில் வெற்றி பெற்ற டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமி அறிவித்திருக்கிறார்.

எனினும், அங்கு பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராகப் போட்டியிட்டு வென்ற அமைச்சர் சுரைடா கூறியிருக்கிறார். அவரது கூற்றை மறுத்துள்ள ஸ்ரீராம் மீண்டும் ரந்தாவ் தொகுதியில் போட்டியிட தானே பொருத்தமானவன் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பரவி வரும் சில வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ரந்தாவ் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அத்தகைய வதந்தி துணைத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்மின் அலி தரப்பினர் பரப்பி விட்ட ஒன்று என்றும் ரபிசி ரம்லி கூறியிருக்கிறார்.

14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கிய ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியின் சர்ச்சைகளையும் விவகாரங்களையும் கட்டம் கட்டமாக விவரிக்கிறது பெர்னாமாவின் கீழ்க்காணும் வரைபடம்: