Home இந்தியா கஜா புயல்: 28 பேர் மரணம்

கஜா புயல்: 28 பேர் மரணம்

2275
0
SHARE
Ad

சென்னை – நேற்று தமிழகக் கரையோரங்களைக் கடந்த கஜா புயல் கோரத்தாண்டவமாடி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி விட்டு தணிந்திருக்கிறது. புயலின் வேகம் தணிந்தது என்பதால் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் செல்லலாம் என வானிலை இலாகா அறிவித்திருக்கிறது.

எனினும், இதுவரையில் கஜா புயலின் தாக்கத்தினால் 28 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் வேதாரண்யத்தில் மட்டும் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் பாராட்டியிருப்பது தமிழக அரசியல் களத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.