
சென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று புதன்கிழமை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து திமுக அறக்கட்டளையின் சார்பில் ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 1கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கஜா புயல் காரணமாக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் ஒருமுகமாகப் பாராட்டிய வேளையில், தற்போது தமிழக அரசியல் தலைவர்கள், தமிழக அரசு எடுத்து வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இதற்கிடையில், நாளை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி புதுடில்லி செல்கிறார். அவரைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் மோடியைச் சந்திக்கிறார்.