சூரிக் – சுவிட்சர்லாந்து நாட்டில் அகில உலக கம்பன் கழகம் நடத்திய ‘கம்பன் விழா’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், “கம்பன் என்றொரு மானுடன்” என்ற தலைப்பில் சிறப்பு இலக்கிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
நவம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த விழா சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ் நாட்டிலிருந்தும் பல முக்கிய பேச்சாளர்களும், இலக்கியவாதிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் வே.நாராயணசாமி, புதுவை மாநில சட்டப் பேரவைத் தலைவர் வெ.வைத்தியலிங்கம், இலங்கை அரசின் கல்வி அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும் இந்த கம்பன் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
வழக்கறிஞரும் இலக்கிய உரையாளருமான த.இராமலிங்கம் தலைமையில் பட்டிமண்டபமும் இந்த கம்பன் விழாவில் இடம் பெற்றது.