Home இந்தியா 3 பேரைக் கொன்றவர்கள் விடுதலை – ராஜிவ் கொலைவழக்கின் 7 பேர்களுக்கும் விடுதலை கிடைக்குமா?

3 பேரைக் கொன்றவர்கள் விடுதலை – ராஜிவ் கொலைவழக்கின் 7 பேர்களுக்கும் விடுதலை கிடைக்குமா?

1099
0
SHARE
Ad

சென்னை – இன்று தமிழகம் முழுவதும் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சை மூவருக்குக் கிடைத்த விடுதலை ஏழுபேருக்கும் கிடைக்குமா என்பதுதான்!

2000-ஆம் ஆண்டில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து 3 மாணவிகளுடன் பேருந்தை எரித்துக் கொன்றதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை இன்று தமிழக ஆளுநர் விடுதலை செய்துள்ளார். அதற்கான கோப்புகளை பலத்த பரிசீலனைக்குப் பிறகே ஏற்றுக்கொண்டதாகவும்  தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது தமிழக அரசு 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்துவருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் இந்த மூன்று பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களின் விடுதலையைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் தற்போது கொந்தளித்து வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுவிக்கப்படாத நிலையில், இந்த மூவர் மட்டும் விடுவிக்கப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.