Home 13வது பொதுத் தேர்தல் பிகேஆர் வேட்பாளர்கள்: கோல கெடாவுக்கு டாக்டர் அஸ்மான் இஸ்மாயில்; அலோர்ஸ்டாருக்கு குய் சியாவ் லியுங் –...

பிகேஆர் வேட்பாளர்கள்: கோல கெடாவுக்கு டாக்டர் அஸ்மான் இஸ்மாயில்; அலோர்ஸ்டாருக்கு குய் சியாவ் லியுங் – அன்வார் அறிவிப்பு

813
0
SHARE
Ad

ANWARஅலோர்ஸ்டார், மார்ச் 31 – நாடு முழுமையிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிகேஆர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றார்.

அந்த வகையில், கோலகெடா தொகுதி பிகேஆர் தலைவர் டாக்டர் அஸ்மான் இஸ்மாயில் (வயது 51) கோலகெடா நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவார் என்றும், கெடா மாநில பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரும், வழக்கறிஞருமான குய் சியாவ் லியுங் (வயது 41) அலோர்ஸ்டார் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுவார் என்றும் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கெடா மாநிலத்திலுள்ள கோலகெடா மற்றும் தாமான் பெர்ஜெயாஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டபோது அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்புகளை செய்தார்.

#TamilSchoolmychoice

கோல கெடா நாடாளுமன்றத்தின் நடப்பு உறுப்பினர் அகமட் காசிம் மற்றொரு அரசியல் பணிக்காக நியமிக்கப்படுவார் என்றும் அன்வார் கூறினார்.

கோலகெடா, அலோர்ஸ்டார் 2008 தேர்தல் முடிவுகள்

கடந்த 2008 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் அகமட் 35,689 வாக்குகள் பெற்று 7,018 பெரும்பான்மையில் கோல கெடா தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த முறை 95,534 வாக்குகளைக் கொண்டிருக்கும் இந்த தொகுதியில் 77 சதவீத மலாய் வாக்காளர்களும், 21 சதவீத சீன வாக்காளர்களும் 1 சதவீத இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.

அதே வேளையில், அலோர்ஸ்டார் தொகுதியில் குய் வெறும் 184 வாக்குகள் வித்தியாசத்தில் மசீசவின் அமைச்சர் டத்தோஸ்ரீ சோர் சீ ஹியுங்கிடம் தோல்வியடைந்தார்.

இந்த முறை 66,416 வாக்குகளைக் கொண்டிருக்கும் அலோர்ஸ்டார் தொகுதியில் 61 சதவீத மலாய் வாக்காளர்களும், 34 சதவீத சீன வாக்காளர்களும், 5 சதவீத இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.

மக்கள் கூட்டணி குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இழந்த தொகுதிகளில் ஒன்றான அலோர்ஸ்டாரில் இந்த முறை தேசிய முன்னணி மீண்டும் வென்று வருவது கடினமான ஒன்றாக இருக்கும் கருதப்படுகின்றது.

தேசிய முன்னணி வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவது, மக்கள் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே அந்தந்த தொகுதிகளின் தேர்தல் இயந்திரங்களை முடுக்கி விடுவதற்கும், வாக்காளர்களைச் சந்திப்பதற்கும் மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்த அறிவிப்புக்கள் வசதியாக இருக்கும்.