Home நாடு வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பதில் இனி புதிய நடைமுறைகள் – மகாதீர் அறிவித்தார்

வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பதில் இனி புதிய நடைமுறைகள் – மகாதீர் அறிவித்தார்

1492
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சீ பீல்ட் மாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கலவரங்கள் – மோதல்கள் போன்றவை மீண்டும் நிகழாமல் இருக்க தனது அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் புதிய நடைமுறைகள் குறித்து இன்று அறிவித்த பிரதமர் துன் மகாதீர், இனி உள்ளூராட்சி மன்றங்களின் ஒப்புதலுடன்தான் அத்தகைய வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படும் என்ற நிபந்தனைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் நில உடமையாளர்களின் உரிமைகளை மீறி நிர்மாணிக்கப்பட முடியாது என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.

“ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஆலயங்கள் எல்லா இடங்களிலும் எழுப்பப்படுகின்றன. மற்றவர்கள் நிலங்களிலும் ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதுதான் பிரச்சனை” என்றும் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனவே, இனி அரசாங்கம் ஒரு புதிய தீர்மானத்தை அமுல்படுத்தவிருக்கிறது. பள்ளிவாசல்கள், ஆலயங்கள், தேவாலயங்கள் ஆகியவை உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியின்றி கட்ட முடியாது” என பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகாதீர் கூறினார்.