அவர் நடிப்பில் அடுத்து வெளிவரும் சீதக்காதி திரைப்படத்தில் எழுபதைத் தாண்டிய முதிய நடிகர் வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்னால் வெளியான அந்தப் படத்தின் முன்னோட்டம் இதுவரையில் 55 இலட்சம் பார்வையாளர்களை யூ டியூப் தளத்தில் மட்டும் ஈர்த்துள்ளது.
புகழின் உச்சியில் இருக்கும்போதே, எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் வயதான வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் துணிச்சலை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சீதக்காதி படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: