Home வணிகம்/தொழில் நுட்பம் டெலிகோம் மலேசியா: 10 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தை சந்திக்கிறது

டெலிகோம் மலேசியா: 10 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தை சந்திக்கிறது

1248
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசு சார்பு நிறுவனங்களில் (GLC) ஒன்றான டெலிகோம் மலேசியா கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது முதன் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதியோடு முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் அந்நிறுவனம் 175.6 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்தாண்டில் 211.9 மில்லியன் ரிங்கிட் இலாபத்தை டெலிகோம் மலேசியா ஈட்டியது.

தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகோம் மலேசியா இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வணிகப் போட்டிகள் மற்றும் பொதுவான பொருளாதாரப் பின்னடைவுகள் ஆகியவை இணைந்த காரணத்தால் இந்த நஷ்டத்தை எதிர்நோக்கியதாக அண்மையில் வெளியிட்ட கணக்கறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, தனது தொலைத்தொடர்பு இணைப்பு சாதனங்கள், சொத்துகள் ஆகியவறைச் சரிசெய்ய வேண்டியிருப்பதால் அதனால் சுமார் 1 பில்லியன் ரிங்கிட் வரையிலான இழப்பைச் சந்தித்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவையெல்லாம் ஒன்று சேர, தற்போது பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நஷ்டத்தைக் கண்டுள்ள டெலிகோம் மலேசியா இந்த ஆண்டு தொடக்கம் முதல் தனது சந்தை மதிப்பில் சுமார் 14.96 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளது.