
கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஜிஎல்சி எனப்படும் அரசு சார்பு நிறுவனங்கள் கணிசமான நன்கொடைகளை வழங்க முன்வந்திருக்கின்றன என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.
பெட்ரோனாஸ், யாயாசான் பெட்ரோனாஸ், கசானா நேஷனல் சைம் டார்பி, சிஐஎம்பி, செல்கோம், டெலிகோம் மலேசியா, ஊழியர் சேமநிதி வாரியம் ஆகியவை உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரையில் 50.8 மில்லியன் ரிங்கிட் நன்கொடைகளை வழங்க முன்வந்துள்ளன.
இவற்றோடு, அரசாங்கமும் தன் பங்காக 25 மில்லியன் ரிங்கிட் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வெள்ள நிவாரண நிதி 75.8 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.