Home இந்தியா ப. சிதம்பரம் இன்று ஜப்பான் பயணம்

ப. சிதம்பரம் இன்று ஜப்பான் பயணம்

634
0
SHARE
Ad

sithambaramபுதுடெல்லி, ஏப்ரல் 1- மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் 3 நாள் பயணமாக இன்று ஜப்பான் செல்கிறார்.

இந்த பயணத்தின் போது ஜப்பான் நிதி மந்திரி மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவின் தொழில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துகிறார்.

ப. சிதம்பரத்துடன் பொருளாதார துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் மற்றும் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் ஆகியோரும் ஜப்பான் செல்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் ஜப்பான் பெரும்பங்கு வகித்து வருவது குறிப்பிடத் தக்கது.