Home நாடு காயமடைந்த தீயணைப்பு வீரரைச் சந்தித்த துணை மாமன்னர்

காயமடைந்த தீயணைப்பு வீரரைச் சந்தித்த துணை மாமன்னர்

830
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகாமட் காசிமை மாட்சிமை தங்கிய துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரின் ஷா நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (IJN) சென்று கண்டார்.

30 நிமிட சந்திப்பின் போது, ​​சுல்தான் நஸ்ரினுக்கு, முகமட் அடிப்பின் உடல்நலம் குறித்து விளக்கப்பட்டது. துணை மாமன்னர் அடிப்பின் குடும்பத்தாருக்கு நன்கொடையையும் வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை (27 நவம்பர்) அதிகாலையில் நடந்த சம்பவத்தில், கலகக்காரர்களால் முகமட் அடிப் தாக்கப்பட்டார். அத்தாக்குதலில் அடிப்புக்கு விலா எலும்பில் பாதிப்பும், உட்காயங்களும் ஏற்பட்டன.

#TamilSchoolmychoice

அடிப்பின் தற்போதைய நிலையைக் குறித்துப் பேசுகையில், நேற்று காலை அடிப் குணமடைந்து வரும் அறிகுறிகளைக் காட்டியதாக, ஐஜேஎன் தலைமை அதிகாரி டத்தோஶ்ரீ டாக்டர் மொகாமட் அசாரி யாகோப் கூறினார்.