Home நாடு தாபோங் ஹாஜி: முன்னாள் நிருவாகத்தின் மீது காவல் துறையில் 2 புகார்கள்

தாபோங் ஹாஜி: முன்னாள் நிருவாகத்தின் மீது காவல் துறையில் 2 புகார்கள்

815
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி நிறுவனத்தின் (Lembaga Tabung Haji) முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ், மற்றும் அதன் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரிகளான டான்ஸ்ரீ இஸ்மி இஸ்மாயில் மற்றும் டத்தோஶ்ரீ ஜொஹான் அப்துல்லாவுக்கு எதிராக இரண்டு காவல் துறை புகார்களை அந்நிறுவனம் செய்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் மூத்த நிருவாக ஊழியர்களான தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அடி அஜுவான் அப்துல் கானி, தலைமை நிதி அதிகாரி டத்தோ ரோசாய்டா ஒமார், மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகள் மீதும் இப்புகார் செய்யப்பட்டுள்ளது.

தபோங் ஹாஜியின் கடந்த கால பரிமாற்றங்களை உள்ளடக்கிய உள்விசாரணையை குறித்து அதன் புதிய நிருவாகத்தால் முன்னெடுக்கப்பட்ட முதல் புகாராக இது அமைகிறது.

தபோங் ஹாஜி வாயிலாக 2017-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஒன்றில் 22 மில்லியன் ரிங்கிட் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், 2012-ம் ஆண்டில் நடந்த சில நிதி முறைகேடுகள் குறித்தும் இவ்விரு புகார்கள் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் நேற்றிரவு கூறியது.