Home Video அஜித்தின் “விஸ்வாசம்” – ரஜினியின் “பேட்ட” – பொங்கலுக்கு மோதுமா?

அஜித்தின் “விஸ்வாசம்” – ரஜினியின் “பேட்ட” – பொங்கலுக்கு மோதுமா?

821
0
SHARE
Ad

சென்னை – பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டிருக்கிறது அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படமும் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், தமிழ்த் திரையுலகமே காத்திருப்பது, இரண்டு படங்களும் மோதுமா அல்லது யாராவது ஒருவர் பின்வாங்கி மற்றவருக்கு வழிவிடுவார்களா என்பதுதான்!

யாருக்கு யார் விட்டுக் கொடுக்கப் போகிறார்கள் – பின்வாங்கப் போவது ‘தல’ யா அல்லது ‘தலைவரா’?

காத்திருக்கிறது தமிழ்த் திரையுலகம்!

#TamilSchoolmychoice

இதற்கிடையில் விஸ்வாசம் படத்தின் முதல் குறு முன்னோட்டம் (Motion Poster) நவம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிடப்பட்ட 6 நாட்களில் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் மட்டும் ஈர்த்திருக்கிறது விஸ்வாசம்.

அந்தப் படத்தின் குறுமுன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: