Home நாடு 1எம்டிபி விவகாரம் பள்ளியில் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சர்

1எம்டிபி விவகாரம் பள்ளியில் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சர்

790
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய வரலாற்று பாடத்தில் 1எம்டிபி (1MDB) ஊழல் குறித்த தகவல்கள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் உறுதி அளித்துள்ளார்.

1எம்டிபி விவகாரம் வரலாற்று பாடத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்படும் என்றும், இதனால் இளைய தலைமுறையினர் அதே தவறுகளை மீண்டும் செய்யாது தவிர்க்கலாம் என்றும் மக்களவையில் அவர் இன்று தெரிவித்தார்.

ஆயினும், இத்தலைப்பு பள்ளிப் பாட நூல்களில் சேர்க்கப்படுமா அல்லது மாணவர் கலந்துரையாடல்களில் ஒரு தலைப்பாக விளங்குமா என்பதை அவர் விளக்கவில்லை.

#TamilSchoolmychoice

முன்னதாக, தேசிய முன்னணி (Barisan Nasional) நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் பேசும்போது ஒரு சம்பவமானது நாட்டின் வரலாற்றில் ஒரு பகுதியாக கருதப்படும் எனில், அது மறக்கப்படாமல் இருப்பதற்கு, அதனை பதிவு செய்வதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மஸ்லீ இவ்வாறு அறிவித்தார்.