Home நாடு சீ பீல்ட் ஆலய கலவரத்தில் இதுவரையில் 68 பேர் கைது

சீ பீல்ட் ஆலய கலவரத்தில் இதுவரையில் 68 பேர் கைது

904
0
SHARE
Ad
ஐஜிபி முகமட் புசி ஹருண்

பாப்பார்: கடந்த திங்கட்கிழமையன்று (26 நவம்பர்) சீ பில்ட் கோயிலில் நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டோர் என சந்தேகிக்கப்படும் 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் தெரிவித்தார். இவ்விவகாரம் குறித்து மேலும் எத்தனை பேர் கைது செய்யப்படுவர் என்பதை தம்மால் கூற இயலாது என்றும், அது இவ்விவகாரம் குறித்து நடத்தப்படும் தீவிரமான விசாரணையை பொறுத்தது என அவர் கூறினார்.

சபா மாநில காவல்துறையினரின் 414 காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்குஜஸா பலாவான் நெகாரா‘ எனப்படும் வீரப்பதக்கம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கோவிலின் தற்போதைய சூழ்நிலை அமைதியாக எந்த ஒரு பிரச்சனையுமின்றி இருப்பதாகக் கூறிய அவர், கோயிலின் வளாகம் இன்னமும் காவல் துறையின் பார்வையின் கீழ் இருப்பதை உறுதிப்படுத்தினார்.